டெல்லி: ஒண்ணுமே இல்லாத ஜீரோ பட்ஜெட் என்று மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்த இன்றைய பட்ஜெட் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  இன்று நாடாளுமன்றத்தில் 2022-23-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் மக்கள் நலத் திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படாதது கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ஜீரோ பட்ஜெட் என்று விமர்சித்து கருத்து பதிவிட்டுள்ளார். அதில்,

‘மோடி அரசின் பட்ஜெட் ஜீரோ பட்ஜெட் என்றும், ஊதியதாரர்கள், நடுத்தர, ஏழை எளியோர், விவசாயிகள், இளைஞர்கள், சிறுகுறு தொழில் முனைவோருக்கு பட்ஜெட்டில் ஒன்றுமில்லை’ என காட்டமாக பதிவிட்டுள்ளார்.