டெல்லி: நடுத்தர மக்களுக்கு துரோகம்; விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு எதுவும் இல்லை என்றும், கிரிப்டோ கரன்சி குறித்து தேசத்திற்கு முழுமையாக சொல்லுங்கள்  என்றும்,. இன்றைய பொது பட்ஜெட் குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கருத்து தெரிவித்து உள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் 4வது முறையாக இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இதில், பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி உள்ள நிலையில் மக்கள் நலனுக்கான எந்தவொரு திட்டமும் அறிவிக்கப்படவில்லை. இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்த நிலையில், மத்திய பட்ஜெட் குறித்து டிவிட் பதிவிட்டுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளரும், தலைமை செய்தித் தொடர்பாளருமான ரந்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது,

“இந்தியாவின் சம்பளம் பெறும் வர்க்கம் மற்றும் நடுத்தர வர்க்கம் தொற்றுநோய், முழு ஊதியக் குறைப்பு மற்றும் பணவீக்கத்தை முறியடிக்கும் காலங்களில் நிவாரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், நிதி மந்திரி நிர்மலா சீதாராமனும், பிரதமர் நரேந்திர மோடியும் பட்ஜெட்டில் எந்த நிவாரணத்தையும் அறிவிக்காமல் அவர்களுக்கு துரோகம்  செய்துள்ளனர்.

இன்றைய பட்ஜெட்டை “நத்திங் பட்ஜெட்” என்று கூறியதுடன், ஏழைகள், சம்பளம் வாங்குபவர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு “பாக்கெட் காலியாக உள்ளது” என்றும்,  செலவினங்களை அதிகரிப்பதற்கும் சிறுதொழில்துறையை மேம்படுத்துவதற்கும் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துஉள்ளார்.

சம்பளம் பெறும் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு செய்யும் துரோகம். இதுமட்டுமின்றி, பட்ஜெட்டில் விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு எதுவும் இல்லை; எந்தவித சலுகைகளும் அறிவிக்கப்படவில்லை.

கிரிப்டோ கரன்சிகள் சட்டப்பூர்வமானதா என்பது தெளிவாகத் தெரியாத நிலையில், அரசு எவ்வாறு லாபத்திற்கு வரி விதிக்கிறது என்றும் கேள்வி எழுப்பியதுடன், இது குறித்து,  நிதி அமைச்சரே, தயவுசெய்து தேசத்திற்குச் சொல்லுங்கள் – நீங்கள் கிரிப்டோ கரன்சிக்கு வரி விதிக்கும்போது, கிரிப்டோ கரன்சி மசோதாவைக் கொண்டு வராமல், கிரிப்டோ கரன்சி இப்போது சட்டப்பூர்வமானதா?

“அதன் ரெகுலேட்டர் பற்றி என்ன? கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்களை ஒழுங்குபடுத்துவது பற்றி என்ன? முதலீட்டாளர் பாதுகாப்பு பற்றி என்ன?  என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.  மாணிக்கம் தாகூர் கூறுகையில், இது நடுத்தர வர்க்கம் மற்றும் விவசாயிகளுக்கு எதுவுமே இல்லாத “கார்ப்பரேட் மற்றும் “பணக்காரர்கள்” பட்ஜெட் என்று  தெரிவித்துள்ளார்.

மேலும்,  “…வேலையில்லா இளைஞர்களுக்கு ஒன்றுமில்லை, விவசாயிகளுக்கு ஒன்றுமில்லை.. நடுத்தர வர்க்கத்தினருக்கு ஒன்றுமில்லை.. மீண்டும் நிர்மலா மேடம் தோல்வியடைந்தார். பட்ஜெட்2022” என்று மக்களவையில் காங்கிரஸ் சாட்டையாளராக இருக்கும்  என்றும் தெரிவித்துள்ளார்.