புதுடெல்லி:
வெங்காயம், தக்காளி விலையை குறைப்பதற்காக மோடி பிரதமர் ஆகவில்லை என்று ஒன்றிய இணை அமைச்சர் கபில் பாட்டில் தெரிவித்துள்ளார்.

தானேயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், விலைவாசி உயர்வுக்கு பிரதமர் மோடியை குறை கூறுகின்றனர். மக்கள், மட்டன் இறைச்சியை ரூ.700 கொடுத்து வாங்குகிறார்கள். பீட்சாவை ரூ.500 கொடுத்து வாங்குகிறார்கள். ஆனால் வெங்காயம் ரூ.10-க்கும், தக்காளி ரூ.40-க்கும் கிடைக்கும் போது விலை உயர்வதாக குற்றம்சாட்டுகிறார்கள் என்றும் தெரிவித்தார்.