பிரதமர் மோடிக்கு அகந்தை: அண்ணா ஹசாரே குற்றச்சாட்டு

Must read

மும்பை.

காராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சமூக சேவகர் அண்ண ஹசாரே, பிரதமர் மோடியை கடுமையாக தாக்கி பேசினார்.

இதுவரை ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்டம், விவசாயிகள் பிரச்சினை குறித்து 30க்கும் மேற்பட்ட கடிதங் களை பிரதமருக்கு எழுதியிருப்பதாகவும், ஆனால் ஒன்றுக்குகூட இதுவரை பதில் வரவில்லை என்றும், மோடி அகந்தையில் இருக்கிறார் என்றும் அப்போது அவர்  குற்றம் சாட்டினார்.

ஏற்கனவே ஊழக்கு எதிராக போராடி வரும் அன்னா ஹசாரே,  லோக்பால் சட்டம் நிறைவேற்றப்படவில்லை என்றால் மீண்டும் போராட்டம் நடத்தப்போவதாக பிரதமர் மோடிக்கு பல முறை  எச்சரிக்கை விடுத்து கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதங்ளில், தாங்கள் (மோடி)  ஆட்சிக்கு வந்ததும் லோக்பால் சட்டத்தில் உள்ள குறைகள் நீக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துவிடும் என அனைவரையும் போல் நானும் நம்பினேன். அது நடைபெறவில்லை. அதனால் ஏமாற்றம் அடைந்ததாக கூறியிருந்தார்.

இந்நிலையிலி, மராட்டிய மாநிலம் சாங்கிலி மாவட்டம் ஆத்பாடி பகுதியில் விவசாயிகளுக்கு ஆதவாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில்  கலந்துகொண்ட  காந்தியவாதி அன்னா ஹசாரே பேசியதாவது,

ஊழலுக்கு எதிரான  லோக்பால் நடைமுறை, லோக்அயுக்தா நியமனம் மற்றும் சட்டம் குறித்தும், வறுமையால் வாடும்  விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் பென்ஷன் மற்றும் விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை போன்ற பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி, பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தபிறகு,  கடந்த 3 ஆண்டுகளில் 30-க்கும் மேற்பட்ட கடிதங்களை பிரதமர் மோடிக்கு எழுதியுள்ளேன். ஆனால், அவரிடமிருந்து ஒரு கடிதத்துக்கு கூட இதுவரை பதில் வரவில்லை.

பிரதமர் மோடி அகந்தையில் இருக்கிறார் என்று குற்றம் சாட்டினார்.

ஏற்கனவே  ஜன்லோக்பால் மசோதாவை வலியுறுத்தி போராட்டம் நடத்திய போது கிடைத்த பொதுமக்களின் மகத்தான ஆதரவு, அடுத்து விவசாயிகளின் பிரச்சினைகளை வலியுறுத்தி நடத்த இருக்கும் போராட்டத்துக்கும் கிடைக்கும் என்று நம்புகிறேன் என்றும்,  என்னுடைய பேரணி, பொதுக்கூட்டம் வாயிலாக வாக்கு சேகரிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு கிடையாது.

இவ்வாறு அவர் பேசினார்.

More articles

Latest article