பெல்லாரி

லித்துகளின் போராட்டத்தை நாய்கள் குறைப்பதற்கு சமம் என மத்திய பாஜக அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் ஒரு வேலைவாய்ப்பு கலந்தாய்வு நடைபெற்றது.   இதில் கலந்துக் கொள்ள மத்திய பாஜகவில் அமைச்சராக பதவி வகிக்கும் அனந்தகுமார் ஹெக்டே சென்றுள்ளார்.   அவர் மதச் சார்பின்மைக்கு எதிராக சில கருத்துக்கள் தெரிவித்திருந்தார்.   அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சில தலித் போராளிகள் அவரது வழியை மறித்து அவருக்கு எதிராக கோஷமிட்டனர்.   காவல்துறையினர் அவர்களை கலைத்து அமைச்சருக்கு வழி அமைத்துக் கொடுத்தனர்.

பிறகு அந்த வேலைவாய்ப்புக் கலந்தாய்வில் இந்த போராட்டத்தை குறிப்பிட்ட அமைச்சர், “நாங்கள் எங்கள் கொள்கைகளில் பிடிவாதமானவர்கள்.   நாய்கள் குரைப்பதைப் பற்றி கவலைப்படமாட்டோம்”  என தெரிவித்தார்.   அமைச்சரின் இந்த பேச்சு தலித் மக்களிடையே கடும் கோபத்தை உண்டாக்கியது.   இந்த நிகழ்ச்சி முடிவில் அமைச்சர் செல்லும் வழியில் கருப்புக் கொடியுடன் நின்று அவருடைய வாகனத்தை மறித்தனர்.    காவல்துறையினர் வாகனத்தை மறித்தவர்களை கைது செய்துள்ளனர்.

அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்புகள் வலுக்கவே, அவர், “நான் தலித்துகளைப் பற்றி தவறான கருத்து எதுவும் சொல்லவில்லை.   காங்கிரஸ் வேண்டும் என்றே எனது பேச்சை திரித்து நான் தலித்து மக்களை கேவலம் செய்ததாக தவறான செய்திகளை பரப்பி வருகிறது.   நான் தன்னை அறிவுஜீவிகள் என சொல்லிக் கொண்டு எனது அரசியலைக் குறை கூறுபவர்களைத்தான் அப்படி குறிப்பிட்டேன்”  என ஒரு செய்தி நிறுவனத்திடம் கூறி உள்ளார்.