முதல்வரின் தாயார் மறைவு : இன்று தமிழக முதல்வரைச் சந்திக்க உள்ள முக ஸ்டாலின்

Must read

சென்னை

ன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து அவருடைய தாயார் மறைவுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவிக்க உள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாய் சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த 12 ஆம் தேதி அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தர்.

அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

அவ்வகையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதல்வரிடம் தொலைபேசி மூலம் இரங்கல் தெரிவித்தார்.

இன்று அவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது கீரீன்வேஸ் சாலை இல்லத்தில் சந்திக்க உள்ளார்.

அப்போது முதல்வரின் தாயார் மறைவுக்கு மு க ஸ்டாலின் நேரில் இரங்கல் தெரிவிக்க உள்ளார்.

More articles

Latest article