நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக மார்ச் மாதம் 24ந்தேதி முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், பொதுமுடக்கம் நவம்பர் 31 ந்தேதி வரை அமலில் உள்ளது. இதற்கிடையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி முதல் மதுரையில் இருந்து சென்னை வழியாக மும்பைக்கு தினசரி விமான சேவை நடைபெற்று வந்த விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் விமான சேவை தொடங்குவதாக அறிவித்து உள்ளது.
அதன்படி, மும்பை- சென்னை- மதுரை- சென்னை-மும்பை விமான சேவையும் வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் தொடங்குகிறது.
விமானம் காலை 9.15 மணிக்கு மும்பையில் இருந்து புறப்பட்டு, காலை 11.15 மணிக்கு சென்னை வந்தடைகிறது.
அதன்பின்னர் அங்கிருந்து 12.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.10 மணிக்கு மதுரை வந்தடைகிறது.
பின்னர் அதே விமானம் மதுரையில் இருந்து மதியம் 1.55 மணிக்கு புறப்பட்டு மதியம் 3 மணிக்கு சென்னை செல்கிறது.
பின்னர் அதே விமானம் மதுரையில் இருந்து மதியம் 1.55 மணிக்கு புறப்பட்டு மதியம் 3 மணிக்கு சென்னை செல்கிறது.
அங்கிருந்து மாலை 4.05 மணிக்கு புறப்பட்டு மீண்டும் 6.15 மணிக்கு மும்பையை சென்றடைகிறது.
இந்த விமானம் தினமும் இதே நேரத்தில் இயக்கப்படுகிறது.
பயணிகளின் வருகையை பொறுத்து விமான சேவைக்கான கட்டணத்தில் மாறுபாடு இருக்கலாம்.
பயணிகளின் வருகையை பொறுத்து விமான சேவைக்கான கட்டணத்தில் மாறுபாடு இருக்கலாம்.
இதற்கான டிக்கெட்டுகளுக்குwww.airindia.in என்ற இணையதளத்திலும், மதுரை விமான நிலையத்திலும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அறிவித்து உள்ளது.
இவ்வாறு அறிவித்து உள்ளது.