ஸ்ரீஹரிகோட்டா: மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் விண்ணில் பாய்ந்தது. ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனையாக மாதிரி விண்கலம் TV -D1 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. இதையடுத்து ககன்யான் சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ அறிவித்து உள்ளது.

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் சோதனை இன்று காலை 8 மணிக்கு நடைபெற இருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு, விண்ணில் ஏவும் நேரம் மாற்றப்பட்டது. பின்னர், ஏவுவதற்கான இறுதிக்கட்ட கவுண்டவுன் தொடங்கிய நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக  நிறுத்தி வைக்கப்படுவதாகவும், “விண்கலம் மேலே எழும்புவது இயல்பாக நடக்க வேண்டும். இரண்டு முறை அதற்காக முயன்றும் அது மேலே எழும்பாததால், அதற்கான காரணத்தைக் கண்டறிய நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

முழுமையாக ஆய்வு செய்து அதன் பிறகு விரைவில் சோதனையை நாங்கள் துவங்குவோம். தற்போதைய நிலையில், ககண்யான் விண்கலம் பாதுகாப்பாக இருக்கிறது” இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, ககன்யான் மாதிரி விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறுகளை சரி செய்யும்பணி துரிதமாக மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து,  ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து மாதிரி விண்கலம் ஏவப்பட்டு விண்ணில் பாய்ந்தது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சனிக்கிழமை (அக். 21) காலை 10 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. டிவி – டி1 ராக்கெட் மூலம் தரையில் இருந்து 17 கிலோ மீட்டா் தொலைவு வரை விண்கலத்தை அனுப்பி மீண்டும் தரையிறக்கப்பட்டது. இந்த மாதிரி விண்கலத்தை தரையிலிருந்து 16.6கிமீ தூரம் அனுப்பி வங்கக்கடலில் இறக்கப்பட்டு சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வெறும் 20 நிமிடத்தில் மாதிரி விண்கலம் அனுப்பும் சோதனை நிறைவு  பெற்றது.

2025ல் மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆளில்லா சோதனை விண்கலம்  வெற்றிகரமாக செலுத்தி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது.

2025-ல் விண்ணிற்கு 3 வீரர்களை இந்தியா அனுப்புகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், ககன்யான் திட்டத்தின் முதல் கட்ட சோதனை ஓட்டம் வெற்றி பெற்றது என்றும்,  ராக்கெட்டில் இருந்து பிரிந்த மாதிரி கலன் வெற்றிகரமாக கடல் பரப்பில் இறங்கியது என்று தெரிவித்தார். தொழில்நுட்ப கோளாறை சரி செய்து ராக்கெட்டை விண்ணில் செலுத்தினோம் என்றவர், கடலில் விழுந்த மாதிரி கலனை மீட்கும் பணியில் ஈடுபட உள்ளோம்.

இந்த சோதனை 3 முறை  ஒத்திவைக்கப்பட்ட  நிலையில்,  திட்டமிட்டபடி இன்றே சோதனை ஓட்டத்தில் வெற்றி கண்டுள்ளதாகவும், இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றது மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  என்று கூறினார்.

இன்று விண்ணில் ஏவப்பட இருந்த ககன்யான் சோதனை ஓட்டம் திடீர் நிறுத்தம்! இஸ்ரோ தகவல்… வீடியோ