2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் மீராபாய் சானு பங்கேற்க முடியாது… சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி திட்டவட்டம்….

Must read

 

2024 ம் ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இருந்து பளுதூக்கும் விளையாட்டை நீக்கி இருப்பதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.

பளுதூக்கும் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் மீது நீண்டகாலமாக ஊக்கமருந்து உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில் இவர்களின் நடவடிக்கை ஒலிம்பிக் போட்டிகளின் தரத்தை கேள்விக்குறியாக்கி வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியிருக்கிறது.

போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கான புதிய வழிகாட்டு விதிகளை தீர்மானிக்க வேண்டிய கோரிக்கை நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளதால் இந்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பரிந்துரைக்க சர்வதேச பளுதூக்கும் சம்மேளனத்தைக் கேட்டுக் கொண்டுள்ள ஒலிம்பிக் கமிட்டி, 2028 ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் புதிய விதிகளுடன் வீரர்கள் அனுமதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் சானு, பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன் தனது 27 வது பிறந்த நாளை கொண்டாடிய மீராபாய் சானுவுக்கும் இந்திய ரசிகர்களுக்கும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் இந்த அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.

More articles

Latest article