மிர்தசரஸ்

மிர்தசரஸ் நகரில் டிரோன் மூலம் டிபன்பாக்ஸ் வெடி குண்டு வீசப்பட்டதால் பஞ்சாப் மாநிலம் பதட்டத்தில் ஆழ்ந்துள்ளது.

சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் விமானப் படைத்தளத்தின் மீது தீவிரவாதிகள் டிரோன் மூலம் வெடிகுண்டு வீசு தாக்குதல் நடத்தினர்.   இந்தியாவில் இதுவே முதல் டிரோன் தாக்குதல் ஆகும்.   இதைத் தொடர்ந்து அடிக்கடி டிரோன் மூலம் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்துவது அதிகரித்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் அமிர்த சரஸ் நகர எல்லையில் உள்ள ஒரு பகுதியில் டிரோன் மூலமாக நேற்று டிபன்பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்டது பஞ்சாப் மாநிலத்தில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.  நாடெங்கும் சுதந்திர தினக் கொண்டாட்டம் நடைபெற உள்ள நிலையில் இந்த வெடிகுண்டு வீச்சு நடந்துள்ளது.

அமிர்தசரஸ் காவல்துறைத் தலைவர் தின்கர் குப்தா, “பஞ்சாப் அமிர்த சரஸ் நகரின் எல்லையில் தான்கே கிராமபகுதிய்ல் ஒரு மர்ம டிபன்பாக்ஸ் கிடந்தது.  அங்குள்ள மக்கள் இது குறித்து தகவல் அளித்ததின் அடிப்படையில் காவல்துறையினர் அங்குச் சென்று சோதனை இட்டனர்.

அந்த டிபன் பாக்சில் 6 கையெறி குண்டுகள், 100 சுற்றுகள் சுடும் அளவுக்குத் தோட்டாக்கள், 2 கிலோ எடை உள்ள வெடிகுண்டு ஆகியவை இருந்தன.

பாகிஸ்தானில் இருந்து இங்கு டிரோன் மூலம் இந்த குண்டுகள் வீசப்பட்டதாகச் சந்தேகம் எழுந்துள்ளது.  இது மிகவும் முக்கியமான விவகாரம் என்பதால் தேசியப் பாதுகாப்புப் படை உதவியைக் கோரி உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.