சென்னை:

50% சிறுபான்மை மாணவர்களை சேர்க்கும் பள்ளிக்கே சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்படும் என தமிழக அரசு கடந்த ஆண்டு பிறப்பித்த அரசாணையை சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது

தமிழகத்தில் சிறுபான்மை பள்ளிகள் அந்தஸ்து தொடர்பான தமிழக அரசு 2018 ஏப்ரல் 5ந்தேதி தேதி ஒரு புதிய அரசாணை பிறப்பித்தது. அதன்படி, சிறுபான்மை யினத்தினர் நடத்தும் பள்ளிகளில், 50% சிறுபான்மையின மாணவர்களை சேர்த் தால் மட்டுமே அந்த பள்ளிகளுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அரசாணையை எதிர்த்து 140 சிறுபான்மையினர்  கல்வி நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்தன. வழக்கின் விசாரணை நடை பெற்று முடிந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது, சிறுபான்மை பள்ளிகள் தொடர்பான  தமிழக அரசின் ஆணையை ரத்து செய்வதாக அறிவித்த சென்னை உயர்நீதி மன்றம்,  பள்ளிகளுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை என தெரிவித்துள்ளது.