சென்னை:

ன்று காந்தி நினைவு தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி, சென்னை  கடற்கரை காமராஜர்  சாலையில் உள்ள காந்தி சிலைக்கு தமிழக ஆளுநர், தமிழகமுதல்வர் உள்பட அமைச்சர்கள், அதிகாரிகள் காந்திய வாதிகள்  மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மகாத்மா காந்தியின் 72வது  நினைவு தினம் இன்று நாடு முழுவதும் கடை பிடிக்கப் பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காந்திய அமைப்பை சேர்ந்தவர்கள் காந்தி சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பள்ளிக் குழந்தைகளின் பஜனைப் பாடல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து காலை 10 மணி அளவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்பட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள்  மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் சென்னை தலைமை செயலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முதலமைச்சர் பழனிசாமி உறுதிமொழியை வாசிக்க, சென்னை தலைமை செயலக ஊழியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் உறுதி மொழி ஏற்று கொண்டனர்.