அப்போலோ மருத்துவமனையில் அமைச்சர்கள்  முக்கிய ஆலோசனை

Must read

சென்னை:
முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு வந்த தமிழக அமைச்சர்கள் அங்கு ஆலோசனையில் ஈடுபட்டனர்.
large_23-1474615471-jayalalitha-hospitalized46567
தமிழக முதல்வர் ஜெயலிலதா, உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை மருத்துவமனைக்கு அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், தங்கமணி, சரோஜா, எஸ்.பி வேலுமணி,பொதுப்பணித்துறை  எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வந்தனர். தமிழக அரசு ஆலோசகர்  ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அதிகாரிகளும் வந்தனர்.
அனைவரும் அங்கு முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.
முதல்வர்  ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து அறிக்கை அளிக்கும்படி  டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் இன்று அரசு தரப்பு  விளக்கம் அளிக்க வேண்டும். மேலும், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து தமிழக அரசு தொடுத்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையும் இன்று வருகிறது.
இந்த இரண்டும் மிக முக்கியமான வழக்குகள். இது குறித்தே அமைச்சர்களும் அதிகாரிகளும் முக்கிய ஆலோசனை நடத்தினார்கள் என்றும் இந்த ஆலோசனை கூட்டத்தில் வழக்கறிஞர்களும் கலந்துகொண்டார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article