சென்னை:
ரசே வருமானத்துக்காக மது விற்பதால் தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகரித்துள்ளதாக பிரபல சமுக சேவகி மேதா பட்கடர் கூறியுள்ளார்.
மது போதைக்கு எதிரான தேசிய பயணத்தை கன்னியாகுமரியில் கடந்த 2ம் தேதி சமூக சேவகர் மேதா பட்கர் துவங்கினார். ப ல்வேறு மாவட்டங்களில் மதுவுக்கு எதிராக பிரசாரத்தை மேற்கொண்ட அவர் இன்று சென்னை வந்தடைந்தார். சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலைக்கு பின்புறம் மதுவுக்கு எதிரான பிரசாரத்தை தொடங்கினார்.
metha-patkar
அப்போது அவர் பேசியதாவது:
மதுபானங்கள், போதை பொருட்களுக்கு எதிராக தேசிய அளவில் எனது பயணத்தை தொடங்கியுள்ளேன்.  இந்த பயணத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர்
தமிழகத்தில் முதல்வராக இருந்த காமராஜ் ஆட்சியின் போதும் அவருக்கு பின் தொடர்ந்த ஆட்சிகளிலும் தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது.
கடந்த 1969ம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்தில் மதுவிற்பனை கொண்டு வரப்பட்டது. தற்போது அரசே மதுவிற்பனையை செய்து வருகிறது.
இந்த மது பழக்கத்தால் ஆண்டுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் அடிமையாகி மரணமடைந்து வருகின்றனர். அரசுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளில் வருவாய் வருகிறது என்பதற்காக மதுவிற்பனையை நியாயப்படுத்த முடியாது.
மது குடிப்பவர்கள் மரணமடைவதால் தமிழகத்தில் இளம் விதவைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மது குடிப்பவர்களின் வீடுகளில் குடும்ப அமைதி கெட்டு கணவன், மனைவி இறந்து அவர்கள் குழந்தைகள் அனாதைகளாகி விடும் சூழ்நிலையும் உள்ளது.
tasmac1a
எனவே தமிழக அரசு மக்கள் நலனை கவனத்தில் கொண்டு பீகார் அரசு மதுவிலக்கை அமல்படுத்தியது போல் தமிழகத்திலும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் என் பயணத்தை மேற்கொண்டுள்ளேன்.
மாநில அரசுகள் அரசியல் கட்சிகளின் கொள்கை முடிவுகளால் மதுவால் மக்கள் கொல்லப்படுவதை தடுக்க வேண்டும் என்பதே இந்த பயணத்தின் நோக்கமாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த பிரசார கூட்டத்தில் கல்லூரி, பள்ளி மாணவர்கள் உள்பட பொது நல அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகள்  மக்கள் அமைப்புகளின் தேசிய ஒருங்கிணைப்பு குழு சார்பில் செய்யப்பட்டிருந்தது.