சென்னை: அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் சிறப்பாக பணியாற்றுகின்றனர் முதல்வர் மு.க.ஸ்டாலின்  சர்டிபிகேட்’ கொடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சர்கள் மட்டுமின்றி இளம் அமைச்சர்களும் இடம்பெற்றுள்ளனர். மொத்த 34 பேர் தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். அமைச்சர்களின் பணித்திறன் குறித்து அவ்வப்போது முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும், ஆலோசனைகளையும் வழங்கி வருவதுடன், மக்கள் பணியில் தீவிர கவனம் செலுத்த அறிவுறுத்தி உள்ளார்.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின்,  அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் என்று புகழாரம் சூட்டியதுடன்,  சிறப்பாக செயல்பட்டு வரும் அரசு அதிகாரிகளுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.