சென்னை: அதிமுக ஆட்சியில் அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது தொடரப்பட்ட 18 கிரிமினல் அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

டந்த அதிமுக ஆட்சியில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளும் திரும்ப பெறுவதாக ஆட்சி பொறுப்பேற்றதும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதைத்தொடர்ந்து அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

2016 முதல் 2021ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் அரசுக்கு எதிராகவும், முதலமைச்சர், அமைச்சர்களுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றசாட்டுகள் கூறியதாக ஸ்டாலின் மீது அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த நிலையில், அவதூறு வழக்குகள் தொடர்பான விசாரணையின்போது சென்னை உயர்நீதிமன்றத்தில், அரசியல் கட்சிகள் மீதான அவதூறு வழக்குகளை திரும்பப் பெற அரசாணையை தமிழக அரசு  தாக்கல் செய்தது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது கடந்த அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட 18 கிரிமினல் அவதூறு வழக்குகள் ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் முரசொலி மற்றும் கலைஞர் டிவி ஆசிரியர்கள் மீதான வழக்குகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளது முரசொலி செல்வம், கலைஞர் டிவி ஆசிரியர் திருமாவேலன் ஆகியோருக்கு எதிரான அவதூறு வழக்குகளும்  ரத்து செய்யப்பட்டு உள்ளன.