ஓபிஎஸ் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் துவங்கியது

Must read


சென்னை:
முதல்வராக ஓபிஎஸ் பதவியேற்ற பிறகு முதன்முதலாக நடைபெறும்  அமைச்சரவை கூட்டம் சற்று நேரத்துக்கு முன் துவங்கியது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கபட்டார். அவரது தலைமையிலான முதல் அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில்  சற்று முன் துவங்கியுள்ளது.
முன்னதாக ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் அலங்கரித்து வைக்கபட்டிருந்த ஜெ.வின் உருவப்படத்திற்கு சசிகலா,  ஓபிஎஸ்,மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பிறகு, ஜெயலலிதா சமாதிக்கு சென்று ஓபிஎஸ் உள்ளிட்ட அமைச்சர்கள் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர் .
பிறகு, அனைவரும் தலைமை செயலகத்தில் கீழ்தளத்தில் உள்ள கூட்டரங்கில் கூடினர்.. முதலில் ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றபட்டது .
ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டுவது, ஜல்லிக்கட்டு,காவிரி விவகாரங்கள் உள்ளிட்டவை குறித்து இக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
 

More articles

Latest article