சென்னை,
ஜெயலலிதா மறைந்ததை அடுத்து, அதிமுக தொண்டர்கள் சசிகலாவை சந்திப்பதில் என்ன தவறு உள்ளது என்று பொன்னையன் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழக அமைச்சர்கள்  சசிகலாவை சந்திப்பதில் என்ன தவறு என அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள  அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பொன்னையன் கூறியதாவது,
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் இறுதி வரை வாழ்ந்தவர் சசிகலா. அவரை தமிழக அமைச்சர்களும், அதிமுக தொண்டர்களும் சந்திப்பதில் என்ன தவறு உள்ளது என்று வினவினார்.
இவ்வாறு பொன்னையன் கூறினார்.