சென்னை: இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் இவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிப்ரவரி 24, 25ந்தேதி என 2 நாள் பிரசாரம் செய்ய உள்ள நிலையில், வரும் 19, 20ந்தேதிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்  போட்டியிடும் ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவாக தி.மு.க. அமைச்சர்கள், எம்.பி.க்கள், கூட்டணி கட்சியினர்  என அனைத்து தரப்பினரும் அங்கு முகாமிட்டு தேர்தல் பணியாற்றி வருகின்றனர். இந்த  நிலையில்,  திமுக இளைஞரணி செயலாளரும்,  அமைச்சருமான  உதயநிதி ஸ்டாலின் வருகிற 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் பிரசாரம் செய்கிறார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அவரது சுற்றுப்பயண விவரமும் வெளியிடப்பட்டு உள்ளது.

அதன்படி, 19ந்தேதி காலை ஈரோடு,  சக்தி சுகர்ஸ் விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு குமலன் குட்டை, கணபதி நகர், அடுக்குமாடி குடியிருப்பு, நாராயண வலசு, இடையன் காட்டு வலசு, முனிசிபல் காலனி, அகில் மேடு வீதி, பழனி மலை கவுண்டர் வீதி, சொக்கநாதர் வீதி, மெட்ராஸ் ஓட்டல், ராஜாஜிபுரம், கே.என்.கே.ரோடு, வண்டியூரான் கோவில் வீதி, விநாயகர் கோவில் வீதி, கிருஷ்ணம்பாளையம், திருநகர் காலனி, சகன் வீதி, சேரன் வீதி, வீரப்பன் சத்திரம் தெப்பக்குளம். 16 நம்பர் பஸ் ரோடு, நெறிகல் மேடு, சத்யா நகர், அக்ரகாரம் வண்டி பேட்டை, பூம்புகார் நகர், காந்திநகர், வில்லரசம் பட்டி நால்ரோடு வழியாக, சக்திசுகர்ஸ் விருந்தினர் மாளிகையில் முடிக்கிறார்.

மீண்டும், 20-ந்தேதி சக்திசுகர்ஸ் விருந்தினர் மாளிகையில் புறப்பட்டு அரசு மருத்துவமனை, நல்லசாமி மருத்துவமனை வீதி, சிதம்பரம் செட்டியார் காலனி, இந்தியன் வங்கி, சென்ட்ரல் தியேட்டர், கால்நடை மருத்துவமனை எதிரில், சித்திக் திடல், மண்டப வீதி, 1,2 செட்டியார் கடை, ஜின்னா வீதி, கிருஷ்ணா தியேட்டர், காந்தி சிலை (ரங்க பவன் வழியாக சின்ன மாரியம்மன் கோவில் வீதி), பொன்னுசாமி வீதி, கே.ஏ.எஸ். நகர், வளையக்கார வீதி, காரை வாய்க்கால், அண்ணா டெக்ஸ், சமாதானம்மாள் சத்திரம், பழைய ரெயில் நிலையம் ரோடு, ஆலமரத்து தெரு, அண்ணாமலை பிள்ளை வீதி, பட்டக்கார வீதி, பொய்யேரிக்கரை வீதி பயர் சர்வீஸ் பின்புறம், காளைமாட்டு சிலை, மணல் மேடு, பழைய எம்ப்லாய்மென்ட் ஆபிஸ் ரோடு வழியாக கிராமடை, சீனிவாசா தியேட்டர், என்.ஜி.ஜி.ஓ காலனி, பெருந்துறை ரோடு, சக்திசுகர்ஸ் விருந்தினர் மாளிகையில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 24. 25ந்தேதி முதலமைச்சர் பிரசாரம்… இன்று வேட்புமனு பரிசீலனை –