ஈரோடு:  இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில், வேட்புமனுத்தாக்கல் நேற்று முடிவடைந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. அங்கு தேர்தல் பிரசாரம் அனல்பறக்கும் நிலையில், காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக முதலமைச்சர் ஸ்டாலின் 24ந்தேதி மற்றும் 25ந்தேதி ஆகிய 2 நாட்கள் அங்கு தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

திருமகன் ஈவேரா மறைவைத்தொடர்ந்து, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள, ஈரோடு கிழக்கு தொகுதியில்  இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தேமுதிக என 4 முனை போட்டி நிலவி வருகிறது.   இந்த தேர்தலில் 10 பெண் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 109 பேர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

7ந்தேதியுடன் வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்த நிலையில், இன்று இன்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் வேட்புமனுக்களை  பரிசீலனை செய்கின்றனர். நாளை மறுநாள்வரை வேட்புமனுவை திரும்பப் பெற விருப்பமுள்ளவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   பிப்ரவரி 10ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு மேல் வேட்பாளர் பெயர், ஒதுக்கப்பட்ட சின்ன்னத்துடன் இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடும்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ். தென்னரசு, தேமுதிக சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழா் கட்சி சார்பில் மேனகா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இடைத்தேர்தலையொட்டி கட்சிகள் தொகுதியில் பிரசாரத்தை தொடங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார். வருகிற பிப்ரவரி 24 ஆம் தேதி, 25ந்தேதி ஆகிய 2 நாட்கள் முதல்வர் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரசாரம் மேற்கொள்வார் என திமுக அறிவித்துள்ளது.

அதுபோல, வருகிற 19 ஆம் தேதியன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்வார் எனவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் கொண்ட 40 பேர் கொண்ட பிரசார பீரங்கிகள் பட்டியல் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.