சென்னை: ஆவினில்  காலியாக உள்ள பணியிடங்கள் இனி டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்வு செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. தொடர்ந்து, காலியாக 322 டிபணியிடங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆவினில் காலியாக உள்ள பணியிங்களுக்கு ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் கூட்டு சேர்ந்து பணி நியமனம் செய்து வந்தனர். இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வந்தது. கடந்த அதிமுக ஆட்சியில் அவ்வாறு நேரடியாக பணி நியமணம்  செய்யப்பட்ட பலரை திமுக அரசு பதவி நீக்கம் செய்துள்ளது. இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், ஆவினில் காலியாக இருக்கும் பணியிடங்கள் இனி டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்வு செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. தொடர்ந்து, தற்போது காலியாக உள்ள   322 பணியிடங்கள் இனிமேல் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளதுடன் காலி பணியிடங்கள் குறித்த பட்டியலும் வெளியிடப்பட்டு உள்ளது.

அதன்படி, ஆவினில் மேலாளர்,துணை மேலாளர், தொழில்நுட்ப வல்லுநர் ஆகிய ஆவின் நிறுவனத்தில் உள்ள 26 வகையான 322 காலிப் பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட உள்ளன அதற்கான தீர்வுகள் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.