சென்னை:  காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக ராஜேஷ் குமார் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி, 28 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 5 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. இதையடுத்து திமுக உடனான கூட்டணியை முறித்துக்கொண்ட காங்கிரஸ் கட்சி விஜய் தலைமையிலான தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில்,  மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கிள்ளியூர் ராஜேஷ் குமார்,  புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களால், தமிழக காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இம்முடிவிற்கு, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்தப் புதிய பொறுப்பைச் செவ்வனே நிறைவேற்ற அவருக்குத் தேவையான வலிமையும் ஞானமும் கிட்ட வாழ்த்து கிறோம் என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]