அமைச்சர் தங்கமணி வீட்டில் திடீர் ஆலோசனை!! 10 அமைச்சர்கள் பங்கேற்பு

Must read

சென்னை:

சென்னையில் அமைச்சர் தங்கமணி வீட்டில் சக அமைச்சர்கள் திடீர் ஆலோசனை நடத்தினர்.


சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள மின்சார துறை அமைச்சர் தங்கமணி வீட்டில் நடந்து வரும் இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், அ.தி.மு.க. அம்மா அணி நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இதே போல் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வீட்டிலும் வேறு சிலர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமைச்சர் தங்கமணி வீட்டில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆலோசனையில் இரு அணிகளும் இணைவது குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை துணை சபாநாயகர் தம்பித்துரை இன்று 2 முறை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article