சென்னை: ஓசி பயணம் விவகாரம் சர்ச்சையான நிலையில், “காசு கொடுத்து டிக்கெட் கேட்டால் கொடுத்துவிடுங்கள்”  நடத்துனர்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில், அது வதந்தி என அமைச்சர் சிவசங்கர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இலவச பயண பேருந்துகளில் மகளிர்கள் காசு கொடுத்து பயணச்சீட்டு கேட்டால் பயணச்சீட்டு அளிக்குமாறு நடத்துனர்களுக்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது என இன்று காலை ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் செய்திகள் பரவின. இந்த நிலையில், அமைச்சர் சிவசங்கர் அப்படியொடி உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை, அது வதந்தி என்று மறுப்பு தெரிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான பெண்கள் இலவச பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், அமைச்சர் பொன்முடி உள்பட சிலர், இலவச பயணங்களை  ஏளமான பேசிய நிலையில், கோவையில் பாட்டி ஒருவர், ஓசி பயணம் வேண்டாம் என்று கூறியது சர்ச்சையானது. மேலும் இலவச பயணம் மேற்கொள்ளும் பயணிகளை பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் இழிவாக நடத்துவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இதையடுத்து, பேருந்தில் பயணிக்கும் பெண்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்று ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

,இந்த நிலையில், , சாதாரண கட்டண பேருந்துகளில் காசு கொடுத்து டிக்கெட் பெற பெண்கள் விரும்பினால், அவர்களுக்கு டிக்கெட் கொடுக்க நடத்துனர்களுக்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் வாய்மொழியாக உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், இலவச பேருந்து பயணம் செய்ய விரும்பான பெண்களிடம் பணம் வாங்கிக்கொண்டு டிக்கெட் கொடுக்க வாய்மொழி உத்தரவிட்டதாக வெளியான செய்தி உண்மை இல்லை, அது வதந்தி என விளக்கம் அளித்துள்ளார்.

ஆம்னி பேருந்து கட்டண உயர்வு ஏழை மக்களை பாதிக்காதாம்! உரிமையாளர்களுக்கு ஆதரவாக பேசும் அமைச்சர் சிவசங்கர்