சென்னை

மிழக அமைச்சர் மா சுப்ரமணியன் அம்மா மினி கிளினிக் திட்டம் முடிவடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன,  அவற்றில் அம்மா மினி கிளினிக் திட்டம் மற்றும் நக்ர்ப்புர நல்வாழ்வு மையம் திட்டங்களும் அடக்கம்.  திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த திட்டங்கள் நிறுத்தி  வைக்கப்பட்டன.

இன்று தமிழக சுகாதாரத்துறை  அமைச்சர் மா சுப்ரமணியன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.  அப்போது செய்தியாளர்கள் அமைச்சரிடம் அம்மா மினி கிளினிக், நகர்ப்புற நல்வாழ்வு மையம் மீண்டும் தொடரப்படுமா எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அமைச்சர்.

“அம்மா மினி கிளினிக் என்பது ஓராண்டுக்கான திட்டமாகக் கொண்டு வரப்பட்டது. அந்த திட்டம் முடிந்து விட்டது. அதை மீண்டும் தொடரவும் முடியாது. அதே சமயம் நகர்ப்புற நலவாழ்வு மையம் என்பது 5 ஆண்டுக்கான திட்டம். இந்த திட்டம் 5 ஆண்டுகளில் நிறைவு பெற்றாலும், அதனை நீட்டிக்க முதல்வர  நடவடிக்கை எடுப்பார்.”

என்று தெரிவித்துள்ளார்.