சென்னை

பாஜக ஆட்சிக்கு வந்தால் பெரியார் சிலை அகற்றப்படும் என்னும் அண்ணாமலையின் பேச்சுக்கு அமைச்சர் முத்துசாமி பதில் அளித்துள்ளார்.

சமீபத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் பாஜகவைச் சேர்ந்த யார் ஆட்சிக்கு வந்தாலும் ஆலய வாசல்களில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையை அகற்றுவோம் எனக் கூறி உள்ளார். இது தமிழகம் எங்கும் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் பெரியார் சிலையை அகற்றுவோம் என்று கூறுவது மிகவும் தவறான கருத்து என்று மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம்,

“யாராலும் தமிழகத்தில் பெரியார் சிலையை அகற்ற முடியாது. எனவே யார் ஆட்சிக்கு வந்தாலும் பெரியார் சிலையை அகற்றுவோம் என்று கூறுவது மிகவும் தவறான கருத்து.  தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கே வாய்ப்பில்லை. 

பாஜகவினர் அவ்வாறு கற்பனை கூட பண்ணிப் பார்க்க முடியாது. அண்ணாமலை சொல்வது போல் பெரியார் சிலை அகற்றப்பட்டால் யாரும் அதைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க மாட்டார்கள்.  அதை நீதிமன்றமும் அனுமதிக்காது.” 

என்று தெரிவித்துள்ளார்.