மேஷம்

வியாபாரமானாலும் சரி ஆபீஸ் வேலையானாலும் சரி மிக நேர்த்தியாக செய்யணுங்க. அலட்சியம் கூடாது. ஸ்லைட்டாய்ப் பண விரயம் ஏற்படலாம். வீட்ல உள்ள லேடீஸ்க்கு ஏதாவது செலவு ஏற்படும். சந்திக்க வேண்டிய நபரை இந்த வாரம் மீட் பண்ண முடியாமல் போகக்கூடும். இட்ஸ் ஓகே. சுப நிகழ்ச்சிக்குத் திட்டமிட்டீங்க இல்லையா? அதுக்குத்  தேவையான பணத்தை திரட்டுவதில் வெற்றி பெறுவீங்க. பணவரவு திருப்தி தரும். திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் சமாளிச்சுடுவீங்க. குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். அவசியம் ஏற்பட்டால் பெரியவங்களோட அட்வைஸ் கேட்டுச் செய்வது நல்லது. கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் போயே போச். டாடியோட ஹெல்த்தில் கவனம் தேவை. ஆபீசுக்குப் போகும் அன்பர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். பட் அநாயாசமாய்ச் சமாளிச்சுடுவீங்க.

சந்திராஷ்டமம் : நவம்பர் 13 முதல் நவம்பர் 16 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயல்பாடுகளிலும் மிகவும் கவனமாக இருங்கள்

ரிஷபம்

அசதியும் சோர்வும் ஏற்படவும் அகன்று திடீர்னு உற்சாகம் கூடும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சில சலுகைகள் அல்லது பாராட்டு அல்லது விருது கெடைக்கும். வியாபாரத்தின் காரணமாகவோ உத்யோக விஷயமாவோ தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ள நேரும். நீங்க மேலதிகாரியா இருந்தால் உங்க கீழ ஒர்க் பண்ற பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பாங்க. வேறு வேலைக்கு முயற்சி செய்வதைத் தவிர்க்கவும். சக ஊழியர்களிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும். ஆபிசர்ஸ் அவ்வப்போது கண்டிப்பு காட்டுவாங்க. வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் தகுந்த எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள் வது அவசியம். மற்றபடி வியாபாரம் வழக்கம்போலவே காணப்படும். சக வியாபாரிகள் ஆதரவாக இருப்பாங்க. குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் தரும் வாரம் இது. சகோதரர்கள் மூலம் பணவரவுக்கு சான்ஸ் உள்ளது.

மிதுனம்

சக வியாபாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை உண்டாகும். ஆபீஸ்ல மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சக பணியாளர்கள் உங்களுக்கு அனுசரணையாக நடந்துகொள்வாங்க. சிலருக்கு அவங்க விரும்பியபடி இடமாறுதல் கெடைக்கும். கவனம் தேவை. ஆபீசுக்குப் போகும் அன்பர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். வேறு வேலைக்கு முயற்சி செய்வதைத் தவிர்க்கவும். சக ஊழியர்களிடம் இணக்கமாக நடந்துக்குங்கப்பா. ஆபிசர்ஸ் அவ்வப்போது கண்டிப்பு காட்டுவாங்க. வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் தகுந்த எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள் வது அவசியம். மற்றபடி வியாபாரம் வழக்கம்போலவே காணப்படும். சக வியாபாரிகள் ஆதரவாக இருப்பாங்க. குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் தரும் வாரம் இது. சகோதரர்கள் மூலம் பணவரவுக்கு சான்ஸ் உள்ளது.

கடகம்

பிசினஸ் செய்யறவராய்  இருந்தால் பொருளாதார நிலை நல்லபடி இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் ஏற்படும். எதிர்பாராத பயணங்களும் அதனால் உடல் அசதி உண்டாகும். உங்களைப் பற்றித் தவறாகப் புரிந்துகொண்ட நண்பர்கள், தங்கள் தவற்றை உணர்ந்து மன்னிப்புக் கேட்பாங்க. பணவரவு திருப்தி தரும். திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் சமாளிப்பீங்க. குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பீங்க அது நல்ல பலன் தரும். அவசியம் ஏற்பட்டால் பெரியவங்களோட ஆலோசனையைக் கேட்டுச் செய்வது நல்லது. மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாக கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். தந்தையின் ஹெல்த்தில் நல்லபடியா கவனம் செலுத்தி அவரை நார்மலாக்கி நிம்மதியளிப்பீங்க பிளஸ் நிம்மதியடைவீங்க.

சிம்மம்

சிறு வியாபாரிகளுக்கு சூப்பரா லாபம் கெடைக்கும். உடலை வேதனைப்படுத்திய சின்னச்சின்ன நோய் தொந்தரவுகள் அகலும். ஸ்டேஷனரி மற்றும் உணவுப்பொருள் சம்பந்தமான பிசினஸ் செய்யும். வியாபாரிகள் சிறப்பான லாபத்தை பெறுவாங்க. குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்கள் வருகையால் பொறுப்புகள் கூடும். ஆபீஸ்ல மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சக பணியாளர்கள் உங்களுக்கு அனுசரணையாக நடந்துக்குவாங்க. ஒரு சிலருக்கு அவங்க எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். நிர்வாகத்தினரின் பாராட்டுகள் உற்சாகம் தரும். வியாபாரத்துல கடையை விரிவுபடுத்துவதற்காக பாடுபடுவீங்க. அதிக உழைப்பின் லேசாய் காரணமாக அசதியும் சோர்வும் உண்டானாலும் மனசுல உள்ள உற்சாகம் அதை மறக்கடிக்கும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். செலவுகளும் அவசியமான செலவுகளாகவே இருக்கும்.

கன்னி

வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். ஒரு சிலருக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைப்பதற்கும் சாத்தியமுண்டு.வியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். யார்கூடவும் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். உடல் ஆரோக்கியம் மேம்படும். பணவரவு மகிழ்ச்சி தரும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் பொருள் சேர்க்கைக்கும் சான்ஸ் உண்டு. ரிலேடிவ்ஸ்  வருகையால் சுப நிகழ்ச்சிங்க ஏற்பாடாகும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சிலருக்கு வீட்டில் தெய்வ வழிபாடுகளை நடத்தும் சான்ஸ் ஏற்படும். சகோதரர்களால் செலவுகள் ஏற்பட்டாலும் சுபச் செலவாக இருப்பது மகிழ்ச்சி தரும். தேவையில்லாத விஷயங்களுக்குக் கற்பனை செய்துக்கிட்டு, விரக்தியோட எல்லைக்குப் போயிடாதீங்க. கொஞ்ச நாளில் நீங்களே அதை நினைச்சு வெக்கப்பட்ட சிரிச்சுடுவீங்க.

துலாம்

சந்தோஷமும் நிம்மதியும் தரும் வாரம். வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். கூட வேலை பார்க்கறவங்களால ஆதாயமும் உண்டாகும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சான்ஸ் சிலருக்கு ஏற்படும். ஆபீஸ்ல திருப்திகரமான போக்குதாங்க காணப்படும். வேறு வேலைக்குச் செல்ல விரும்பு பவர்கள் அதற்கான முயற்சில ஈடுபடலாம். நல்ல வேலை கிடைக்க சான்ஸ் இருக்கு. பணியிடத்துல சில மாற்றங்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்துல விற்பனையும் லாபமும் திருப்தி தருவதாக இருக்கும். பங்குதாரர்கள் ஒங்களோட முயற் சிகளுக்கு உதவி செய்வாங்க. சக வியாபாரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும், தேவையான பணம் இருப் பதால் சமாளித்துவிடுவீங்க. ரிலேடிவ்ஸ்  வருகை மகிழ்ச்சியுடன் ஆதாயமும் தருவதாக இருக் கும். திருமணத்துக்கான முயற்சிகளை மேற்கொள்ள லாம்.

விருச்சிகம்

பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு சான்ஸ் இருக்கு, ரிலேடிவ்ஸ் வருகையால சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். திருமண வயதில் உள்ள பெண் அல்லது பிள்ளைக்கு திருமண முயற்சிகளை மேற்கொள்ளுவீங்க. பழைய கடன்களைத் தந்து முடிக்கும் வாய்ப்பு ஏற்படும். உறவினர், நண்பர் வீட்டு விசேஷத்தில் கலந்துக்குவீங்க. வாழ்க்கைத்துணைவழி ரிலேடிவ்ஸ்ஸால் அனுகூலம் உண்டாகும். ஆபீஸ்ல பணிச்சுமை அதிகரிக்கும். இருந்தாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமா செயல்படுவீங்க. ஒங்களோட கோரிக்கை நிர்வாகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பாங்க. குடும்பத்தை நிர்வகிக்கும் லேடீஸ் பொறுமையா இருக்கவேண்டிய வாரம். தாய்வழி ரிலேடிவ்ஸ் மூலம் பணவரவு மற்றும் பொருள்சேர்க்கைக்கு சான்ஸ் உண்டு.

தனுசு

பேரன்ட்ஸ்ஸோட உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். சிலருக்கு திடீர்ப் பயணங்களும் அதனால் ஆதாயம் கிடைக்கக்கூடிய வாய்ப்பும் ஏற்படும். கடையை விரிவுபடுத்த நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். மனசுல அவ்வப்போது லேசான சோர்வு ஏற்படக்கூடும். அதை ஏங்க அனுமதிக்கறீங்க? அலுவலகம் செல்லும் பெண்களுக்கு சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. குடும்பத்துல கணவன் – மனைவிக்கிடையே சின்னச்சின்னதாய் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். ஒருவரை யொருவர் அனுசரிச்சுப்போயிடறது நல்லது. ஹெல்த்தில் கவனம் தேவைப்படும் வாரம். பணவரவைப் பொறுத்தவரை பிரச்னை எதுவும் இல்லை. ரிலேடிவ்ஸ்  வருகை ஹாப்பி ஆக்கும் . பிள்ளைங்களோட தேவைங்களை நிறைவேற்றுவதில் சற்று அலைச்சல் ஏற்படும். முன்பைவிட இந்த வாரம் மனசுலா உற்சாகமும் தன்னம்பிக்கையும் இன்கிரீஸ் ஆகி உங்களை ஹாப்பியாக்கும்.

மகரம்

அலுவலகத்துல பணிச்சுமை அதிகரிக்கும். இருந்தாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாகச் செயல்படுவீங்க. அதிகாரிங்க அனுசரணையாக இருப்பாங்க.வியாபாரத்தை விரிவுபடுத்தவும், வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்குக் கடையை மாற்றவும் வாய்ப்பு உண்டாகும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப் படக்கூடும் என்றாலும் உடனே சரியாயிடும். உங்களுடைய சமயோசிதமான ஆலோசனை பெரிதும் பாராட்டப்படும். புதிய வேலைக்கு அப்ளை செய்திருந்தவங்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். வியாபாரத்தில் பார்ட்னர்ஸ் கூட இருந்துக்கிட்டிருந்த கருத்து வேறுபாடு நீங்கி இணக்கமான சூழ்நிலை உண்டாகும். சில விஷயங்கள்ல தடைகளும் தாமதமும் இருந்தாலும் முன்பு மாதிரி டென்ஷன்ஸ் இருக்காது.

கும்பம்

குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும்போது, பெரியவங்ககிட்ட கலந்து ஆலோசிச்சு எடுக்கறது நல்லது. வீட்ல சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் – மனைவி ஒருவரையொருவர் அனுசரிச்சுப்போயிடுவீங்க என்பதால் அதிக பிராப்ளம்ஸ் இருக்காது. கூடப் பொறந்தவங்ககிட்ட பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிங்க. நல்ல ஃப்ரெண்ட்ஸ்ஸா வெல்விஷரா இருந்தவங்க மறுபடியும் கான்டாக்ட்ல வருவாங்க. எஸ்பெஷலிமுன்பு உங்க கூடவேலை பார்த்தவங்க… சிரமமான நேரங்களில் அது மாதிரி ஃப்ரெண்ட்ஸ் உதவி செய்வாங்க. பழைய கடன்களைத் தந்து முடிப்பதற்கான சான்ஸ்  ஏற்படும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். தந்தைவழி ரிலேடிவ்ஸ்ஸால் செலவுகள் ஏற்படும். அரசாங்க வகையில் இழுபறியாக இருந்த காரியம் கடின முயற்சியின் பேரில் சாதகமாக முடியும். ஆபீஸ்ல சுமுகமான சூழ்நிலையே காணப்படும்.

சந்திராஷ்டமம் :  நவம்பர் 9 முதல் நவம்பர் 11 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயல்பாடுகளிலும் மிகவும் கவனமாக இருங்கள்

மீனம்

எல்லா விஷயங்கள்லயும் தடையும் தாமதமும் இருக்கும். எதையுமே ஒரு முறைக்கு ரெண்டு முறையா நடந்து அலைஞ்சு முடிக்க வேண்டியிருக்கும். சலிச்சுக்காதீங்க. குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு ஜாலியா.. ஹாப்பியாப் பொழுது போகும். அக்கம்பக்கத்துல உள்ளவங்கவிட்ட பக்குவமாக நடந்துக்கறது நல்லதுங்க. நீங்களா வலியப்போய் சண்டை வலிக்காதீங்க. அலுவலகம் செல்பவர்களுக்கு திருப்தி தரும் வாரம். சலுகைகளும் கிடைக்கும். வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். வேறு வேலைக்கு முயற்சி செய்வதைத் தவிர்க்கவும். சக ஊழியர்கள் கிட்ட இணக்கமா நடந்துக்குங்க. பணவரவு போதுமான அளவு இருக்கும். செலவுகளும் அளவாகவே இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அவசியமே இல்லாம மனசுல கவலையையும் பயத்தையும் போட்டு அழுத்திக்க வேணாம். சொல்லிட்டேன்.

சந்திராஷ்டமம் : நவம்பர் 11 முதல் நவம்பர் 13 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயல்பாடுகளிலும் மிகவும் கவனமாக இருங்கள்