கோவை

தமிழக அரசின் நோக்கம் மது விற்பனையைக் குறைப்பதே ஆகும் என அமைச்சர் முத்துசாமி கூறி உள்ளார். 

இன்று தமிழக அரசின் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அமைச்சர் செய்தியாளர்களிடம்.

“தமிழக அரசு டாஸ்மாக் மது விற்பனையை அதிகப்படுத்துவதற்காக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக தீபாவளி நேரத்தில் பிரச்சினைகள் எதுவும் ஏற்படாத வகையில் காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இதையொட்டி டாஸ்மாக் கடைகளில் உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அரசு மது குடிப்பவர்களை ஊக்குவிக்கும் வகையிலோ, விற்பனையை அதிகரிக்கும் வகையிலோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தமிழகத்தில் மது விற்பனையைக் குறைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.”

ன்று தெரிவித்துள்ளார்.