சந்தானத்தால் தாக்கப்பட்ட வழக்கறிஞரை சந்தித்தார் பொன்.ரா!

Must read

 

சென்னை

டிகர் சந்தானத்தால் தாக்கப்பட்டதாக கூறப்படும் வழக்கறிஞரை மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சந்தித்துள்ளார்.

விஜய் டி வியில் அறிமுகமாகி திரைப்பட காமெடியனாகி தற்போது கதாநாயகனாக உயர்ந்துள்ள சந்தானத்துக்கும் ஒரு கட்டிட காண்டிராகடருக்கும் இடையில் கல்யாண மண்டபம் கட்டும் விவகாரத்தில் தகராறு எழுந்தது.   அப்போது காண்டிராக்டருக்கு ஆதரவாக பேசிய வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் என்பவரை நடிகர் சந்தானம் தாக்கியதாக கூறப்படுகிறது.

மூக்கு உடைபட்ட காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரேம் ஆனந்த் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.   தாக்கப்பட்ட வழக்கறிஞர் பா ஜ கவை சேர்ந்தவர் என்பதால் இணையத்தில் இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது.    இது குறித்து வளசரவாக்கம் காவல் நிலையத்தில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரேம் ஆனந்துக்கு அறுவை சிகிச்சை நடந்ததாகக் கூறப்படுகிறது.   இன்னும் பிரேம் ஆனந்த் மருத்துவமனையில் தான் இருக்கிறார்.  இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கறிஞரை மருத்துவமனையில் சென்று பார்த்து நலம் விசாரித்துள்ளார்.   அவருடன் பா ஜ க பிரமுகர்கள் சிலரும் சென்று பிரேம் ஆனந்தை நலம் விசாரித்துள்ளனர்.

More articles

Latest article