“மெர்சல்” ரிலீஸ் ஆகுமா? மெர்சலில் விஜய் ரசிகர்கள்!

Must read

விஜய் படங்கள் வெளியாகும் போது ஏதாவது ஒரு சர்ச்சை கிளம்பி வருகிறது.   காவலன், துப்பாக்கி, தலைவா, கத்தி, அவ்வளவு ஏன் புலி படம் கூட பிரச்னையில் சிக்கியது.  தெரி சென்னையில் வெளியாவது தாமதம் ஆனது.   தற்போது மெர்சல் தீபாவளி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் தரப்பில் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் சென்சாரால் வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.   தமிழ்நாட்டு திரையரங்குகளில் டிக்கட் புக்கிங் துவங்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் விலங்குகள் நல வாரியத்திடம் இருந்து இந்தப் படத்துக்கு சான்றிதழ் தரப்படாததால் சென்சாருக்கு வாரியம் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளது.  இந்தப் படத்தில் புறா, பாம்பு போன்றவற்றை பயன்படுத்தியதற்கு விலங்கு நல வாரியம் இன்னும் சான்றிதழ் தராத நிலையில் சென்சார் எப்படி சர்டிஃபிகேட் வழங்க முடியும் எனவும் அந்தக் கடிதத்தில் கேட்கப்பட்டுள்ளது.

இதற்கு பதில் அளித்த சென்சார் குழு இன்னும் இந்தப் படத்துக்கு சான்றிதழ் வழங்கவில்லை என தெரிவித்துள்ளதாக தகவர் வெளியாகி உள்ளது.   இந்த தகவல் உண்மை என்றால் படம் வெளிவருமா என்பதே சந்தேகம் தான்.   விஜய் ரசிகர்களை இந்தத் தகவல் தவிப்பில் ஆழ்த்தி உள்ளது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article