சென்னை: சென்னையில் இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகர  மேயர் பிரியாக தலைமையில் மாஸ்க் அணிய வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்த பிரசாரத்தின்போது சுமார் 4மணி நேரத்தில் 50ஆயிரம் பேருக்கு மாஸ் விநியோகிகப்பட்டது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத் துறை சார்பாக, 4மணிநேரத்தில் 50,000 முகக்கவசங்கள் வழங்கும் விழிப்புணர்வு இயக்கத்தை  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாநகராட்சி மேயர் ஆகியோர்,  தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-123க்குட்பட்ட லஸ் கார்னர் சந்திப்பில் இன்று தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு முகக் கவசங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

தமிழ்நாட்டில் மட்டும் தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் மாஸ்க் அவசியம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு உள்ளிட்டோர் இன்று (29.6.22) சென்னை மயிலாப்பூர் பகுதியில் தொடர்ந்து 4மணி நேரம், 50,000 முகக் கவசங்கள் இலவச விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின்போது, மேயர் மற்றும் அமைச்சர்கள் முகக்கவசம் உயிர்கவசம் என்று பொறிக்கப்பட்ட டிசர்ட் அணிந்து, பொதுமக்களுக்கு மாஸ்க் வழங்கினர்.