சென்னை: இன்று நடைபெறும் தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  நீட் தேர்வு விலக்கு மசோதாவை தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய கேள்வி எழுப்பியுள்ள  கவர்னரின் ரவியின் கேள்விக்கும் பதில் அளித்தார்.

சென்னை, தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் தொடங்கியது. சபாநாயகர் அப்பாவு ஆளுநர் திருப்பி அனுப்பிய கடிதம் குறித்து விளக்கி பேசினார். அப்போது நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு ஆளுநர் கூறிய காரணங்கள் ஏற்புடையதாக அல்ல என்று கூறினார்.  ஆளுநர் கடிதத்தின் தமிழாக்கத்தை முழுமையாக வாசித்தார்.

இதையடுத்து தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீட் விலக்கு கோரும் மசோதாவை தாக்கல் செய்து, விரிவாக உரையாற்றினார். அவர் பேசியதாவது,

நீட் விலக்கு மசோதா, முன்பு, சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது சட்டப்பூர்வமானது என்று கூறியதுடன், மாணவர் சேர்க்கை மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்று கூறியதுடன்,    நீட் தேர்வு அறிமுகம் ஆன காலத்தில் இருந்தே தமிழ்நாடும், தமிழ்நாடு அரசும் தொடர்ந்து எதிர்த்து வருகிறது என்றவர், உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. நீட் விலக்கு சட்ட முன் வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பியது அரசியலமைப்பு முறைப்படி சரியானதல்ல.

நீட் தேர்வு குறித்த ஆளுநரின் மதிப்பீடுகள் முற்றிலும் தவறானது ஆளுநரின் கருத்து உயர்மட்டக் குழுவை அவமதிப்பது போல் உள்ளது  சட்ட முன் வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் உச்சநீதிமன்ற உத்தரவை ஆளுநர் சுட்டிக்காட்டுவது சரியான நடைமுறையல்ல என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

நீட் தேர்வை அறிமுக காலத்தில் இருந்தே தமிழ்நாடு அரசு எதிர்த்து வருகிறது என்று கூறியதுடன்,  நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கு எதிராக உள்ளது என்றும்,  12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், மருத்துவப் படிப்பு சேர்க்கையை தமிழக அரசு நடத்தி வந்தது. நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கு எதிராக உள்ளதால் பெரும்பாலான தமிழக மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்று கூறியதுன், தமிழக அரசின் சட்ட முன்வடிவை,  ஆளுநர் “தன்னிச்சையாக திருப்பி அனுப்பி இருப்பது சரியா நடவடிக்கை என்றும் விமர்சித்தார்.

ஏற்கனவே இதுபோல அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவையில் இயற்றி அனுப்பி வைக்கப்பட்ட நீட் விலக்கு  தீர்மானத்தை குடியரசு தலைவர் நிறுத்தி வைத்தார் என்பதை சுட்டிக்காட்டியதுடன், நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க பரிந்துரை வழங்கவே,  திமுக ஆட்சிக்கு வந்த உடன், நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்தது. அந்த குழு அளித்த  பரிந்துரையின் அடிப்படையில், நீட் விலக்கு மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது என்று தெரிவித்தார்.

நீட் விலக்கு மசோதா கடந்த 2021ம் ஆண்டு  செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டு,  தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்று கூறியவர், தற்போது சட்ட முன்வடிவை திருப்பி அனுப்பி உள்ள ஆளுநரின் கடிதத்தில் கூறப்பட்டுள்ள தகவலுக்கும் விலாவரியாக பதில் அளித்தார்.

நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான உயர்நிலை குழு பரிந்துரை குறித்து ஆளுநர் எழுப்பி உள்ள ஆளுநரின் கேள்வி தவறானது என்று கூறியதுடன் இது தொடர்பாக, பெற்றோர், மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் கருத்தை கேட்டு, சட்டநுட்பங்களை ஆய்வு செய்து ஏ.கே.ராஜன் குழு அறிக்கை அளித்துள்ளது என்றும்,  >நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான உயர்நிலை குழு, அறிக்கை அடிப்படையில் பரிந்துரை செய்யவில்லை என்றும் விளக்கியதுடன், ஆளுநரின் கருத்து, நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான உயர்நிலை குழுவை அவமதிக்கும் வகையில் உள்ளது என்று குற்றம் சாட்டினார்.

ஆளுநர் தனது சொந்த கருத்துகளை சுட்டிக்காட்டுவது என்பது, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது; மரபும் அல்ல; நீட் விலக்கு மசோதா குறித்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் மொத்த மதிப்பீடும் தவறானது என்று கூறியதுடன், ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ள உச்சநீதிமன்ற தீர்பை மேற்கோள் காட்டி இருப்பதும் தவறானது என்று விளக்கம் அளித்தார்.

அரசியலமைப்பின்படி ஆளுநர் செயல்படாமல் தன்னிச்சையான கருத்துகளை கூறியது சரியல்ல.கொள்கை அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டத்தை உயரிய கண்ணோட்டத்தொடு பார்க்காமல், குறை கூறுவது சரியல்ல; உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் திருப்பி அனுப்புகிறேன் என்பது ஏற்கத்தக்கது அல்ல. நீட் கிராமப்புற மற்றும் ஏழை எளிய மாணவர்களை எதிர்மறையாக பாதித்துள்ளது. மட்டுமல்லாது இது பள்ளிக்கூட பயிற்று முறையை ஊக்குவிக்காமல் தனிப்பயிற்சியை ஊக்குவிக்கிறது.”

இவ்வாறு அவர் பேசினார்.