டில்லி

காஷ்மீர் மாதத்தில் ரம்ஜானை முன்னிட்டு ராணுவ தாக்குதல் நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் கடும் தாக்குதல் செய்து வருகின்றனர்.   மேலும் மக்களில் சிலரும் அவர்களுக்கு ஆதரவாக கல்வீச்சில் ஈடுபடுகின்றனர்.   அவர்கள் மீது ராணுவம் தாக்குதல் நவடிக்கைகள் எடுத்து வருகிறது.   இதனால் உயிரிழப்புகள் அனைத்து தரப்பிலும் ஏற்படுகிறது.

இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் மாதம் மிகவும் புனிதமான மாதம் ஆகும். அதனால் மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலத்தில் அமைதியான சூழல் நிலவ தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.   அதை ஒட்டி ராணுவ தாக்குதல் நவடிக்கைக்களை ரம்ஜான் மாதத்தில் நிறுத்தி வைக்க உத்தேசித்துள்ளது.

எனவே ரம்ஜான் மாதம் முடியும் வரை ராணுவ தாக்குதல் நடவடிக்கைகளை முழுவதுமாக ஒத்தி வைக்குமாறு காஷ்மீர் மாநில முதல்வர் மெகபூபா முப்தியிடம் தெரிவித்துள்ளது.   அதே நேரத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் அதற்கு பதில் தாக்குதல் நடத்தி பொதுமக்களை காக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.