கர்நாடகா பாஜகவை தாக்கும் சிவசேனா

மும்பை

சிவசேனாவின் செய்தி தொடர்பாளரான சஞ்சய் ரௌத் கர்நாடக பாஜகவை கடுமையாக தாக்கி உள்ளார்.

நடந்து முடிந்த கர்நாடகா தேர்தலில் பாஜக 104 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.   காங்கிரஸ் மற்றும் மஜத இணைந்து சுமார் 117 இடங்களை கைப்பற்று உள்ளது.  அதை ஒட்டி இருகட்சிகலும் இணைந்து அரசு அமைக்கக் கோரி கடிதம் கொடுத்துள்ளது.  ஆனால் கர்நாடகா ஆளுநர் இதுவரை இந்தக் கூட்டணையை அரசு அமைக்க அழைக்கவில்லை.

இது குறித்து பாஜகவின் முன்னாள் கூட்டணிக் கட்சியான சிவசேனா கட்சியின் செய்தி தொடர்பாளரான சஞ்சய் ரௌத், “பாஜகவிடம் 104 உறுப்பினர்களே உள்ளனர்.  காங்கிரஸ் – மஜத விடம் அரசு அளிக்க பெரும்பான்மை உள்ளது.  ஆனால் மாநில அரசியல் மிகவும் கேவலமாக உள்ளது.   அதிகாரம் பொருந்திய ஒரு கட்சி பல துறைகளின் மூலமும் ரூ.100 கோடி மூலமும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தம் அளிக்கிறது.   நமது நாட்டு ஜனநாயகத்தின் உண்மையான முகத்தை உலகுக்கு காட்டி விட்டது” என பாஜகவை பற்றி கூறி உள்ளார்.

Tags: Shiv sena condemns Karnataka BJP