மென்பொருள் உலகில் கொடிகட்டிப் பறக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம் இணையதள உள்நுழைவு பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு (Internet Explorer – IE ) 2021 ம் ஆண்டு ஆகஸ்ட் 17 ல் விடைகொடுக்கப்போவதாக அறிவித்துள்ளது.

மைக்ரோசாப்டின் 365 செயலிகளும் வரும் நவம்பர் மாதம் 30 ம் தேதி முதல் படிப்படியாக இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் இருந்து வேறு பயன்பாட்டிற்கு மாற்றப்படுகிறது.

கடந்த 2015 ம் ஆண்டு முதல் ‘ப்ராஜெக்ட் ஸ்பார்டன்’ என்ற பெயரில் மேற்கொண்டுவரும் நடவடிக்கைக்கு ஆதரவாக இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிராண்டிற்கான தனது ஆதரவைக் குறைக்க மைக்ரோசாப்ட் முடிவெடுத்துள்ளதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.