வாஷிங்டன்: டிக்டாக்கை தொடர்ந்து,  அலிபாபா உள்பட பல சீன நிறுவனங்களை தடை செய்ய அமெரிக்க அதிபர்  டிரம்ப் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கு இடையே பல ஆண்டுகளாக வர்த்தக் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே லடாக் எல்லைப்பகுதியில் நடத்த ராணுவவீரர்களுக்கு இடையேயான போரில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து, சீன நிறுவனங்களையும், சீன தயாரிப்புகளையும் புறக்கணிக்க வேண்டுகோள் விடுத்துள்ள இந்திய அரசு, சீன நிறுவனத்தின் மொபைல் செயலிகளான டிக் உள்பட ஏராளமான செயலிகளுக்கு தடை விதித்து உள்ளது.  இதனால் சீன நிறுவனங்கள் கடுமையான பொருளாதார பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன.

இந்திய அரசின் நடவடிக்கையைத் தொடர்ந்து, அமெரிக்காவும் டிக்டாக் செயலிக்கு சமீபத்தில் தடை விதித்து. இந்த நிலையில்,  சீனாவுக்கு சொந்தமான அலிபாபா போன்ற பிற நிறுவனங்களை தடை செய்யவும் முடிவு செய்துள்ளதாக  செய்தியாளர்களின் கேள்விக்கு டிரம்ப்  அளித்துள்ள பதில் மூலம் தெரிய வந்துள்ளது.