மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் 4 ஆயிரம் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்க அந்நிறுவன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மைரோசாப்ட் நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களை நீக்க மைக்ரோசாஃப்ட் நிறுவனம் திட்டம் தீட்டி வருவதாக பல நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்தன . இந்த நிலையில், இதனை தனியார் செய்தி நிறுவனம் ஒன்று உறுதி படுத்தி உள்ளது.

இது தொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவன செய்தித்தொடர்பாளர் கூறியிருப்பதாவது:

சுமார் 4000 ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்ய மைக்ரோசாஃப்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பிற நிறுவனங்களில் நடப்பதை போன்று தான் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திலும் மாற்றங்கள் நடந்து வருகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் அமெரிக்காவை தவிர்த்து பிற நாடுகளில் 121,000 பேர் வேலை செய்கிறார்கள். அமெரிக்காவில் சுமார் 71000 பேர் வேலை செய்கிறார்கள். இதில் அமெரிக்காவுக்கு வெளியே உள்ள ஊழியர்களைத்தான் மைக்ரோசாப்ட் நிறுவனம் குறி வைத்துள்ளது.

ஹெச்-1பி விசா மூலம் அதிக பணியாளர்களை அமெரிக்கா வரவழைக்கும் நிறுவனங்களில் மைக்ரோசாப்ட் இந்த ஆண்டு முதல் இடத்தில் உள்ளது. எனவே வெளிநாட்டு ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த முடிவால் அதில் பணியாற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.