சென்னை: மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை  மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இன்று  நேரடி ஆய்வு செய்கிறார்.

மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால்  சென்னை மீண்டும் வெள்ளத்தில் சிக்கி தத்தளித்து வருகிறது. மக்கள் சொல்லானா துயரத்தை எதிர்கொண்டனர். ஆட்சியாளர்களின் திட்டமிடாத செயல்களால், சென்னை வெள்ளத்தில் மிதப்பது தொடர்கதையாகி வருகிறது.  மிக்ஜாம் புயல்  கடந்த சென்று 4 நாட்கள் ஆகிய நிலையிலும், சென்னையின் பல பகுதிகள், அதாவது  வேளச்சேரி, தாம்பரம், முடிச்சூர், மேடவாக்கம், மடிப்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, பழைய வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், மணலி, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் தேங்கிய மழை நீர் குறைந்தபாடில்லை. மழைநீரால் அத்தியாவசிய தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாமல் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில், வென்னை வெள்ள பாதிப்புக்கு தமிழ்நாடு அரசு மத்தியஅரசிடம் நிவாரணம் கோரியதுடன்,  ஆய்வு செய்து போதுமான நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. மேலும், பொதுமக்களும் நிவாரணம் அளிக்க வேண்டுகோள் விடுத்துள்ளது.

 இந்த நிலையில், ஏற்கனவே மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னையின் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த நிலையில்,  இன்று  மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் மற்றும் ஜல்சக்தித் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் சென்னை வருகை தருகிறார். பின்னர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் முடிச்சூர், வரதராஜபுரம், சென்னையின் மேற்கு மாம்பலம் மற்றும் திருவல்லிக்கேணி பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

மத்தியஅரசு தமிழகத்துக்கு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 450 கோடி, ‘சென்னை பேசின் திட்டத்திற்கான ஒருங்கிணைந்த நகர்ப்புற வெள்ள மேலாண்மை நடவடிக்கைகளுக்கு ரூ. 561 கோடி என மொத்தம் ரூ. 1,011 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டுக்கு ரூ. 1,011 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது! மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்