தஞ்சை: தஞ்சையில் எம்.ஜி.ஆர். சிலையை மர்ம நபர்கள் பெயர்த்தெடுத்து உடைத்து  தூக்கி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளது.

தஞ்சை வடக்கு வீதியில் காளிக்கோயில் சுற்றுச் சுவரை ஒட்டி 4 அடி உயரம் கொண்ட சிமெண்ட் தூணில் எம்ஜிஆரின் மார்பளவு சிலை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது. அந்த சிலை திடீரென மாயமானது.  சிலையின் அருகே உள்ள டீ கடைக்காரர், காலையில் கடையை  திறக்க வந்தபோது, அருகில்  இருந்த எம்ஜிஆர் சிலை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார். இதுகுறித்து தஞ்சை மாவட்ட  அதிமுகவினருக்கு தகவல் தெரிய வர  பரபரப்பு எற்பட்டது.

இந்த நிலையில்,காணாமல் போன எம்.ஜி.ஆர் சிலை, பீடத்தோடு பெயர்த்தெடுக்கப்பட்டு,  தூக்கி வீசப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, இது குறித்து தஞ்சை தெற்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். மேலும்,  மீட்கப்பட்ட சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்பட்டது.

இந்த சம்பவம் அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிலையை பெயர்த்து தூக்கி வீசி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் விச்சாரித்து வந்தனர். அருகே இருந்த சிசிடிவி காமிரா பதிவுகளை கொண்டும் தேடி வந்தனர்.

இந்j நிலையில், சிலையை உடைத்த சேகர்  என்ற நபர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மதுபோதையில் சிலையை சேதப்படுத்தியதாக காவல்துறையினர் முதற்கட்ட தகவல் தெரிவித்துள்ளனர்.  இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.