நடிகர் விஜய் ரோல்ஸ்ராய்ஸ் கார் குறித்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் தெரிவித்த எதிர்மறை கருத்துகள் நீக்கம்…!

Must read

சென்னை: நடிகர் விஜயின் ரோல்ஸ் ராய்ஸ் கார் குறித்து நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன் தெரிவித்த எதிர்மறை கருத்துகள் நீக்கம் செய்வதாக சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.
நடிகர் விஜய் பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி செலுத்துவதிலிருந்து விலக்குக் கோரி  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி சுப்பிரமணியம் ,வரி செலுத்துவது என்பது நன்கொடை அல்ல நாட்டு குடிமக்கள் அனைவரது கட்டாய பங்களிப்பு” என்றும் நீதிபதி தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. வரிவிலக்குக் கோரி ஒருவர் நீதிமன்றத்தை அணுகும்போது, இதுபோல அபராதம் விதிப்பதோடு தேவையற்ற கருத்துக்களைத் தெரிவிப்பதும் சரிதானா என நடிகர் விஜய் தரப்பில் கேள்விகள் எழுப்பப்பட்டன.

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் மனுதாக்கல் செய்தார். நீதிபதி தெரிவித்த கருத்துக்களைத் திரும்பப் பெற வேண்டுமென்றும் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா அமர்வு முன்பாக விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு இன்று  நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.என்.மஞ்சுளா அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது நடிகர் விஜய் வழக்கு ஆவணங்களில் தொழிலை குறிப்பிடவில்லை என நீதிபதி கூறியிருக்கிறார். அதைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை என விஜய்யின் வழக்கறிஞர் சுட்டிக் காட்டினார்.  கடின உழைப்பால் கார் வாங்கப்பட்ட நிலையில் அதை நீதிபதி விமர்சித்து இருப்பது தேவையற்றது என்றும் தன்னை தேச விரோதியாக கூறுவது தவறு எனவும் வாதிட்டார்.

இந்த  இறுதி விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வாசிக்கப்பட்டது. நடிகர் விஜய் குறித்து நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன் தெரிவித்த எதிர்மறை கருத்துகள் நீக்கம் செய்வதாக அறிவித்தனர்.

More articles

Latest article