கொல்கத்தா,

றைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 101வது பிறந்தநாளை யொட்டி, மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் புகழாரம் சூட்டி உள்ளார்.

அவர் தனது டுவிட்டர் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது,  எம்ஜிஆரின் 101வது பிறந்தநாளில், சிறந்த தலைவரும், திரைப்பட கலைஞரான எம்.ஜி.ராமசந்திரனை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்வோம் என்று மம்தா தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

மம்தா ஏற்கனவே பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக மக்களுக்கு வாழ்த்து செய்தி கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.