எம்ஜிஆர் 105வது பிறந்தநாள்: தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மரியாதை…

Must read

சென்னை: எம்ஜிஆர் 105வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு  தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன்மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதிமுக நிறுவனரும், மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.அவர்களின் 105 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவரது சிலைக்கு இன்று அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என தமிழக அரசு ஏற்கவே அறிவித்திருந்தது.  கிண்டி எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு தமிழக அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள்,அரசு உயர் அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, கிண்டி எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு சுகாதாரத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் எம்ஜிஆர் பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷையன் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

More articles

Latest article