விழுப்புரம்:
விழுப்புரத்தில் நடந்த ‘மிஸ் கூவாகம்’ போட்டியில், சென்னையைச் சேர்ந்த மெகந்தி ‘மிஸ் கூவாகம் -2022’ பட்டம் பெற்றார்.

விழுப்புரம் நகராட்சி மைதானத்தில், மிஸ் கூவாகம் 2022 இறுதிச்சுற்று போட்டி நேற்று இரவு நடந்தது. சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் தலைமை வகித்தார். முதல் சுற்றில் வென்று, இரண்டாவது சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்ட 15 பேர் மேடையில் ஒய்யாரமாக நடந்து வந்தனர்.

இதில் ஏழு பேர், மூன்றாம் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.இவர்களுக்கு, பொது அறிவுத்திறன் போட்டி நடந்தது. சிறந்த முறையில் பதில் கூறிய சென்னையைச் சேர்ந்த மெகந்தி, மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்டார்.திருச்சி ரியானா சூரி, இரண்டாம் இடத்தையும், சேலம் சாக் ஷி ஸ்வீட்டி, மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.