ஈரோடு:
மு கோழி மோசடி வழக்கில் சிறைத் தண்டனை அனுபவிக்காமல், ஈரோட்டில் பதுங்கி இருந்த சென்னிமலையை சேர்ந்த பழனிசாமியை போலீசார் கைது செய்தனர்.

சக்தி ஈமு பார்ம்ஸ் என்ற பெயரில் இருந்த தனது நிறுவனத்தில் 62 முதலீட்டாளர்கள் செலுத்திய ரூ.1.25 கோடியை திருப்பித் தராமல் பழனிசாமி உள்ளிட்ட 6 பேர் மோசடி செய்ததை அடுத்து, 6 பேருக்கும் தலா ரூ.1.50 லட்சம் அபராதம், ஒருநாள் சிறை தண்டனை அனுபவிக்க கோவை டான்ஃபிட் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், சிறைத் தண்டனை அனுபவிக்காமல், ஈரோட்டில் பதுங்கி இருந்த சென்னிமலையை சேர்ந்த பழனிசாமியை போலீஸார் கைது செய்தனர்.