திருச்சி:
மயபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு, திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை தேரோட்ட விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சித்திரைத் தேர்த் திருவிழா நடைபெறவில்லை.

இந்த ஆண்டுக்கான சித்திரைத் தேரோட்ட திருவிழா கடந்த 10 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்ட விழா இன்று நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பக்தர்களின் வசதிக்காகவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், மதியம் 3 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை அறிவித்துள்ளது.