மயிலாடுதுறை:
யிலாடுதுறை மாவட்டத்தில் 41 நாட்களுக்கு பிறகு, மீண்டும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா 3வது அலை ஓய்ந்த பின்பு, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து வருகிறது. இந்தநிலையில் மயிலாடுதுறையில் ஒரு நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

பிப்ரவரி 25 ஆம் தேதிக்கு பிறகு மயிலாடுதுறையில் யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படாத நிலையில், 41 நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அம்மாவட்ட மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.