மோடிக்கு எழுப்பப்பட்ட 15 கேள்விகள் : 5 மற்றும் 6

டில்லி

டகங்கள் பிரதமர் மோடிக்கு எழுப்பிய 15 கேள்விகள் வரிசையில் இன்று 5 மற்றும் 6

பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியது இல்லை. குறிப்பிட்ட சில ஊடகங்களுக்கு தனிப்பட்ட பேட்டியில் மட்டும் அவர் தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அதை ஒட்டி ஊடகக்கள் அவருக்கு 15 கேள்விகள் எழுப்பி இருந்தன.

அந்த வரிசையில் இன்று 5 மற்றும் 6 ஆம் கேள்விகள் இதோ :

5. கடந்த 2016 ஆம் வருடம் நவம்பர் மாதம் 14 ஆம் தேதி அன்று நீங்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தவறு என ஆனால் எந்த தண்டனையும் ஏற்கத் தயார் என கூறினீர்கள். சமீபத்தில் ரிசர்வ் வங்கி அளித்த தகவலின்படி நீங்கள் அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது இருந்த ரூபாய் நோட்டுக்களில் 99% மேல் திரும்பி வந்து விட்டதாக தெரிவித்தது. அப்படியானால் நீங்கள் கள்ள நோட்டு, மற்றும்கருப்புப் பணம் ஆகியவை ஒழிக்கப்படும் என கூறியது தவறாகி உள்ளது. அத்துடன் உங்கள் அமைச்சர்கள் வங்கியில் உள்ள பணத்துக்கு வரி கிடையாது என அறிவித்தனர். ஆனால் வருமான வரித்துறை ஒவ்வொரு வங்கிக் கணக்கையும் ஆய்ந்துள்ளது.

இதனால் நீங்கள் கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நீங்கள் என்ன சாதனை புரிந்தீர்கள்? பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கும் முன்பு மக்கள் துயரடையாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நீங்களோ உங்கள் அரசோ எடுக்கவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்களின் வாங்கும் திறன் குறைந்துள்ளதாக பல பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு பிரதமர் என்னும் முறையில் நீங்கள் ஏன் இது குறித்து யோசிக்கவிலை? இது குறித்து நீங்கள் யாருடன் ஆலோசனை நடத்தினீர்கள்? இத்தகைய பின்விளைவுகள் ஏற்படலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?

6. சிபிஐ அமைப்பு தற்போது பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளது. நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் போது சிபிஐ ஒரு கூண்டுக்கிளி என வர்ணித்தீர்கள். ஆனால் இன்றும் அதுபோலவே சிபிஐ உள்ளது. உங்கள் அரசியல் எதிரிகளான லாலு பிரசாத் யாதவ் மற்றும் ப சிதம்பரம் போன்றோரின் வழக்கில் சிபிஐ காட்டும் அக்கறையை உங்கள் உயிர் நண்பர் அமித்ஷா வழக்கில் மேல்முறையீடு செய்வதில் ஏன் காட்டவில்லை? அது மட்டுமின்றி உங்கள் கூட்டணிக் கட்சியினர் மீதான குற்றச்சாட்டுக்களிலும் தற்போது சிபிஐ ஏன் கவனம் செலுத்துவதில்லை ? சிபிஐ அமைப்பு உங்களுடைய அரசியல் ஆதாயத்துக்காக மட்டும் செயல்பட்டு வருகிறதா?

அடுத்த கேள்விகளை நாளை காண்போம்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 5 and 6, 5 மற்றும் 6, Media's question to modi, ஊடகங்கள் கேள்வி, மோடி
-=-