தமிழகத்தில் ஊடக உரிமை மீறப்படுகிறதா?

Must read

 
ங்களின் ஊடக உரிமையை தமிழக அரசு பறிப்பதாக குற்றம்சாட்டி, சென்னையில், பத்திரிக்கையாளர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு இன்று ஆர்ப்பாட்டம்  நடத்தியது.
ஊடக பணியாளர்களின் 6-க்கும் மேற்பட்ட அமைப்புகளின் சார்பிலான பிரதிநிதிகள் நூற்றுக்கணக்கானோர், இன்றைய போராட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
patr-top
போராட்டத்தில், பத்திரிகையாளர்களின்  ஜனநாயக உரிமைகளை பறிக்கக் கூடாது, பத்திரிக்கை சுதந்திரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், காவல்துறையினரின் கடுமையான கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்பது போன்ற முழக்கங்கள் போராட்டத்தில் எழுப்பப்பட்டன.
சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் குறித்த செய்திகளை சேகரிக்க செல்லும் ஊடகவியலாளர்களுக்கு முன்பு வழங்கப்பட்டிருந்த 4-ஆம் எண் நுழைவு வாயில் அனுமதி மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இந்த பத்திரிகையாளர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு முன்வைத்துள்ளது.
மேலும், தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களுக்கு செய்தி பணிக்கு பயன்படுத்திக்கொள்ள, நாமக்கல் கவிஞர் மாளிகை அருகே மட்டும் புதியதாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது ஏற்கப்படமாட்டாது என்றும் அப்போது அவர்கள் குறிப்பிட்டார்கள்.
காவல்துறையினரின் புதிய சோதனை கட்டுப்பாடுகளால், பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளது என்றும், பத்திரிக்கையாளர்கள் சங்க நிர்வாகிகள் குறை கூறியுள்ளார்கள்.
இந்த விவகாரம் குறித்து பேசிய தமிழ்நாடு ஊடக ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் இந்திரசேனா கூறும் போது,
தமிழகத்தில் ஊடகவியாளர்களின் உரிமை முழுமையாக பறிபோயுள்ளதாக குறிப்பிட்டார்.மேலும், அவர் பேசுகையில் எந்த செய்தியை எப்போது எப்படி தர வேண்டும் என்பதை ஆட்சியாளர்களே முடிவு செய்யும் நிலை உள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.தங்களது கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை, இது போன்ற ஆர்ப்பாட்டங்கள் தொடரும் என்றும் அவர் அப்போது தெரிவித்தார்.

More articles

Latest article