அரசு பள்ளி – கல்லூரிகளில் சாதிப்பெயர்?  ஐகோர்ட்டு உத்தரவு!

Must read

 
சென்னை:
ரசு பள்ளிகளில் சாதிப்பெயர் இருந்தால் அதை மாற்ற பரிசீலனை செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.
அரசு பள்ளிகள், கல்லூரிகளில் பெயரில், குறிப்பிட்ட சாதிப்பெயர்கள் உள்ளன. அதை நீக்க வேண்டும் என கோரிய வழக்கில் சென்னை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது.
court
இந்த வழக்கு  தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பு வழக்குரைஞர் ஆஜராகி, சிறுபான்மையின கல்லூரி களில்தான் சாதி அல்லது சமுதாயப் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அந்தக் கல்லூரிகளின் பெயர்கள் மற்றும் நிர்வாகத்தில் தேவையின்றி, தமிழக அரசு தலையிட முடியாது.
ஏனெனில் அவை தனியார் கல்லூரிகள் நிர்வாகச் சட்டம் 1976-ன் கீழ் செயல்படுபவை. மனுதாரர் குறிப்பிடுவது போல அரசு கல்லூரிகள், பள்ளிகளில் எதுவும் அதுபோன்ற சாதிப் பெயர்களில் இல்லை என்றார்.
அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்குரைஞர், சாதி, சமுதாயப் பெயர்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் பட்டியலை தாக்கல் செய்தார்.
இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட  நீதிபதிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களின் பெயர்கள் இருந்தால் அதனை நீக்க அரசு பரிசீலிக்க வேண்டும் என்று குறிப்பிட்டனர்.

More articles

1 COMMENT

Latest article