டெல்லி: ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றிவாகை சூடிய இந்திய வீரர்கள் தாயகம் திரும்பி உள்ளனர். இந்த நிலையில், தனது தந்தையின் மரணத்தில் கொள்ள முடியாத இந்திய அணியின் பிரபல பவுலர் முகமது சிராஜ், சொந்த ஊர் திரும்பியதும், தனது தந்தையாரின் சமாதிக்கு சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்,

இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும்  ஆஸ்திரேலிய பயணம் மேற்கொண்டது. அங்கு  3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய அணி 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. இரு அணிகள் இடையே 4 போட்டிக்கொண்ட டெஸ்ட் தொடர் நடந்தது. இதில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய மண்ணில் 2-வது தொடரை கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது.

ஆஸ்திரேலியாவின் காபாவில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் நான்காம் நாள் ஆட்டத்தில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் அசத்தலாக பந்துவீசி 73 ரன்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவரது சாதனை  வெற்றிக்கு வித்திட்டது. அவருக்கு வாழ்த்து மழை குவிந்தது.

இந்த தருணத்தில், எனது தந்தை உயிருடன் இருந்திருந்தால் மிகவும் சந்தோசம் அடைந்திருப்பார் என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

இதையடுத்து, இந்திய கிரிக்கெட் வீரர்கள் இன்று நாடு திரும்பினார்கள். அதையடுத்து, ஒவ்வொருவரும் அவர்களின் சொந்த ஊருக்கு பயணமாகி வருகின்றனர். அதுபோல, முகமது சிராஜும் தனது சொந்தஊருக்கு திரும்பினார்.

முன்னதா, முகமது சிராஜின் தந்தை, சிராஜின்  ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின்போது காலமானார். கொரோனா கெடுபிடிகள் காரணமாக, தந்தையின் இறுதி சடங்கிற்கு கூட சிராஜால் வர முடியாத நிலை ஏற்பட்டது.  சிட்னியின் பிளாக்டவுன் ஓவலில் சிராஜ் பயிற்சி அமர்வை முடித்தபோது,  தனது தந்தையின் இறப்பு செய்தியை மட்டுமே அறிந்து கொள்ள முடிந்தது. அவரால் உடனே தாயகம் திரும்ப முடியவில்லை.  அதனால், இன்று சொந்த ஊர் திரும்பியதும், முதன்முதலாக மறைந்த தனது தந்தை முகமது கவுசின் கல்லறைக்கு சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.